ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் அலுமினிய மறுசுழற்சி ஆய்வு மையம் தொடக்கம்

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் அலுமினிய மறுசுழற்சி ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் அலுமினிய மறுசுழற்சி ஆய்வு மையம் தொடக்கம்
Published on

கவுண்டம்பாளையம், ஏப்.21-

கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக அலுமினியக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஒரு தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அமைத்துள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். டிரஸ்ட் முதன்மை அலுவலர் ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

ரூட்ஸ் குழுமத்தின் சேர்மன் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுமினிய மறுசுழற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்குநர் எபினெசர் ஜெயக்குமார் சிறப்புரை வழங்கினார். இந்த ஆராய்ச்சிப்பணிக்கு (டி.எஸ்.டி) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கீழ் அனுமதியும், ஒரு கோடியே 18 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை திருவனந்தபுரத்திலுள்ள (சி.எஸ்.ஐ.ஆர் என்.ஐ.ஐ.எஸ்.டி) அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் என்ற ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆராய்ச்சி பணியை இயந்திரவியல் இணைபேராசிரியர் பாக்கியநாதன், பேராசிரியரும், துறைதலைவருமான கருப்புசாமி, திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர் என்.ஐ.ஐ.எஸ்.டி முதன்மை விஞ்ஞானி ரவி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பாளர்களாக கொடிசியா தலைவர் சுந்தரம், துணைத்தலைவர் திருஞானம், தொழில் முனைவர் பாலசுப்ரமணியம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதலவர் என்.ஏ.அலமேலு நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com