காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய தேர்பவனி

காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புனித ஆக்னேஷ் அன்னை
புனித ஆக்னேஷ் அன்னை
Published on

காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு, பங்கு தந்தை ஸ்டீபன்ராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com