தக்காளி - தேங்காய் பால் புலாவ்

தக்காளி புலாவ் செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தக்காளி - தேங்காய் பால் புலாவ்
Published on

தேவையான பொருட்கள் : 

பாஸ்மதி அரிசி - ஒரு கப், 

வெங்காயம் - 1, 

தக்காளி - 3, 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், 

பச்சைமிளகாய் - 2, 

புதினா - ஒரு கைப்பிடி, 

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி, 

[பாட்டி மசாலா] மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், 

தேங்காய்பால் - அரை கப், 

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: 

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2.

செய்முறை : 

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். 

தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். 

அரிசியை நன்றாக கழுவி தேங்காய் பாலுடன், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். 

எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். 

பிறகு, ஊற வைத்த அரிசியை தண்ணீர், தேங்காய் பால் கலவையோடு சேர்த்து ஊற்றுங்கள். 

மேலும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள். 

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

அருமையான தக்காளி - தேங்காய் பால் புலாவ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com