புத்துணர்ச்சி தரும் தக்காளி எலுமிச்சை ஜூஸ்

தினமும் காலையில் பழங்கள், காய்கறிகளில் செய்த ஜூஸ் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று தக்காளி எலுமிச்சை ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
புத்துணர்ச்சி தரும் தக்காளி எலுமிச்சை ஜூஸ்
Published on

தக்காளி - ஒன்று ( பொடியாக நறுக்கவும்),
இந்துப்பு - சிட்டிகை,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை :

தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்

மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

சூப்பரான சத்தான தக்காளி எலுமிச்சை ஜூஸ் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com