முகம் தங்கம் போல ஜொலிக்கணுமா? இன்ஸ்டன்ட் க்ளோ தரும் பப்பாளி 'ஃபேஷியல்'!

பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' என்சைம்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகியவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.
Papaya facial
Published on

பண்டிகை நாட்கள், சுபவிசேஷங்கள் அல்லது திடீரென ஒரு பார்ட்டிக்குச் செல்ல வேண்டியிருக்கும் போது, பார்லருக்குச் சென்று ஃபேஷியல் செய்ய நமக்கு நேரமிருக்காது.

அப்படிப்பட்ட நேரங்களில், நம்ம வீட்டில் இருக்கும் பப்பாளி பழத்தை வைத்தே வெறும் 15 நிமிடங்களில் முகத்தைத் தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும்.

பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' என்சைம்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகியவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இன்ஸ்டன்ட் பிரகாசத்தைத் தரக்கூடியவை. வீட்டில் இருந்தபடியே பப்பாளியைக் கொண்டு எப்படி இன்ஸ்டன்ட் க்ளோ பெறலாம்.

பப்பாளி - தேன் மேஜிக் பேக்..

வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளபளக்க வைக்க இந்த பேக் ஒரு சிறந்த தேர்வாகும்.

நன்றாக பழுத்த பப்பாளி துண்டுகளை ஸ்பூனால் நன்றாக பிசைந்துவிட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி விடவும்.

15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே உலரவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தேன் சருமத்திற்கும் ஈரப்பதத்தையும், பப்பாளி இன்ஸ்டன்ட் க்ளோவையும் கொடுக்கும்.

பப்பாளி - அரிசி மாவு இன்ஸ்டன்ட் ஸ்க்ரப்..

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தை வழுவழுப்பாக மாற்ற இது உதவும்.

2 ஸ்பூன் பப்பாளி பழக்கூல் ஒரு ஸ்பூன் நைசான அரிசி மாவு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி, மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் வட்ட வடிவில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

5 நிமிட மசாஜிற்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகம் பட்டுப் போல் மென்மையாக மாறி, சருமம் பளிச்சென்று ஜொலிக்கும்.

பப்பாளி ஃபேஷியல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை..

ஃபேஸ் பேக் பண்ணும்போது நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு நன்கு பழுத்த பப்பாளி பழத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காய் அல்லது அரை பதம் உள்ள பழத்தைப் பயன்படுத்தக் கூடாது.

எலுமிச்சை சாறு அலர்ஜி உள்ளவர்கள் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள், இந்த பேக்குகளை முகத்தில் போடுவதற்கு முன்பு காதின் பின்புறம் தடவிப் பார்த்து அலர்ஜி இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com