search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கழிப்பறைக்கு சென்று அழுதேன்: ராகுலை போன்ற நிலைமை எனக்கும் ஏற்பட்டது- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
    X

    கழிப்பறைக்கு சென்று அழுதேன்: ராகுலை போன்ற நிலைமை எனக்கும் ஏற்பட்டது- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

    • தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும்.
    • ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுலை போன்ற நிலைமை தனக்கு வந்துள்ளதாகவும் அப்போது தான் அழுததாகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் ராகுல் திறமையான வீரர். 3 விதமான போட்டிகளில் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அவருடைய ஆட்ட நுனுக்கத்தில் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.

    தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு ஓய்வுக்கு பிறகு அவர் திரும்ப வந்தால் அவரால் மிக சிறப்பாக விளையாட முடியும்.

    ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும். எனக்கு இதே போன்று நிலைமை ஏற்பட் டது.

    அப்போது எனக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸ் என்று நினைத்து வீரர்கள் அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்று ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினேன். அந்த அளவுக்கு அந்த சூழ்நிலை மோசமாக இருக்கும். அதனையும் நான் அனுபவித்தேன்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    Next Story
    ×