search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். போட்டியில் விறுவிறுப்பு- கடைசி ஓவரில் முடிந்த 20 ஆட்டங்கள்
    X

    ஐ.பி.எல். போட்டியில் விறுவிறுப்பு- கடைசி ஓவரில் முடிந்த 20 ஆட்டங்கள்

    • இந்த ஐ.பி.எல். தான் கடைசி ஓவர் மற்றும் கடைசி பந்து வரை அதிகமான முறை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். சீசன் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்து வருகிறது. வேறு எந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஐ.பி.எல். தான் கடைசி ஓவர் மற்றும் கடைசி பந்து வரை அதிகமான முறை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்றுடன் 35 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் 20 போட்டிகள் கடைசி ஓவரில் முடிவடைந்தன.

    குஜராத்-சி.எஸ்.கே. அணிகள் மோதிய முதல் போட்டியே கடைசி ஓவரில் தான் முடிந்தது. 179 ரன் இலக்கை குஜராத் அணி 19.2-வது ஓவரில்தான் எடுத்தது. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 5 ரன்னில் வெற்றி பெற்றது.

    குஜராத்-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசி பந்தில் முடிவு தெரிந்தது. கொல்கத்தா அணி 205 ரன் இலக்கை எடுத்தது. ரிங்குசிங் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை அடித்து வெற்றி பெற வைத்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ-பெங்களூர், பெங்களுர்-சி.எஸ்.கே., லக்னோ-குஜராத், பெங்களூர்-ராஜஸ்தான், டெல்லி-ஐதராபாத் உள்ளிட்ட ஆட்டங்களிலும் கடைசி ஓவரில் தான் முடிவடைந்தன.

    இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது. இதனால் ஐ.பி.எல்.லில் தொடர்ந்து விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

    Next Story
    ×