search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுக்கட்டும் மும்பை- ஐதராபாத்: 25-வது லீக்கில் இன்று மோதல்
    X

    ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுக்கட்டும் மும்பை- ஐதராபாத்: 25-வது லீக்கில் இன்று மோதல்

    • சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் தான்.
    • சூர்யகுமார் யாதவ் கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்து ஒரு வழியாக பார்முக்கு திரும்பினார்.

    ஐதராபாத்:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (லக்னோ, ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 228 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதும், அதில் ஹாரி புரூக் சதம் அடித்ததும் ஐதராபாத்துக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது.

    கேப்டன் மார்க்ரம், அபிஷேக் ஷர்மாவும் அந்த ஆட்டத்தில் நன்றாக ஆடினர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார், சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே கைகொடுக்கிறார்கள். அத்துடன் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது ஐதராபாத்துக்கு உற்சாகமளிக்கும்.

    தொடக்க இரு ஆட்டங்களில் பெங்களூரு, சென்னையிடம் உதை வாங்கிய 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அதன் பிறகு டெல்லி, கொல்கத்தா அணிகளை தோற்கடித்தது. இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது. முதல் 3 ஆட்டங்களில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்து ஒரு வழியாக பார்முக்கு திரும்பினார். இதே போல் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா, திலக் வர்மாவும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா சிக்கனமாக (ஓவருக்கு சராசரி 6.25 ரன்) பந்துவீசி கலக்குகிறார். ஆனால் மற்ற பவுலர்களின் பந்துவீச்சு சீராக இல்லை. எனவே பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    கடந்த ஆட்டத்தில் முதல்முறையாக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 2 ஓவர் பந்துவீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் தான். மொத்தத்தில் ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுக்கட்டும் இவ்விரு அணிகளில் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    Next Story
    ×