search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
    X
    LIVE

    லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    பெங்களூரு:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    Live Updates

    • 12 Nov 2023 4:02 PM GMT

      நெதர்லாந்தின் கடைசி விக்கெட்டை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீழ்த்தினார்.

    • 12 Nov 2023 3:45 PM GMT

      குல்தீப் யாதவை தொடர்ந்து தனது 2 -வது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.

    • 12 Nov 2023 3:45 PM GMT

      தனது 2-வது விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

    • 12 Nov 2023 2:57 PM GMT

      விராட் கோலியை தொடர்ந்து பந்து வீசிய சூர்யகுமார் யாதவ்.

    • 12 Nov 2023 2:56 PM GMT

      பும்ரா ஓவரில் பாஸ் டி லீட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    • 12 Nov 2023 2:29 PM GMT

      நெதர்லாந்து அணியின் கேப்டன் விக்கெட் விராட் கோலி வீழ்த்தினார். ஸ்காட் எட்வர்ட்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    • 12 Nov 2023 2:22 PM GMT

      சிராஜ் கேட்ச் பிடிக்கும் போது தொண்டையில் அடிப்பட்டது. இதன் காரணமாக அவர் களத்தில் இருந்து வெளியேறினார். 

    • 12 Nov 2023 2:20 PM GMT

      நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை கடந்துள்ளது.

    • 12 Nov 2023 1:55 PM GMT

      ஜடேஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் அவுட் ஆனார்.

    • 12 Nov 2023 1:44 PM GMT

      66 ரன்களில் 2-வது விக்கெட்டை இழந்தது நெதர்லாந்து அணி. கொலின் அக்கர்மன் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    Next Story
    ×