இரும்புத்திரையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `இரும்புத்திரை' படத்தின் கேரள வெளியீட்டு உரிமை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai #Vishal
இரும்புத்திரையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை'.

பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தாவும், வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்திருக்கின்றனர். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படமாக உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

விஷால் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #Irumbuthirai #Vishal

X

Maalai Malar
www.maalaimalar.com