அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை'

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `இரும்புத்திரை' படத்தின் கேரள திரையரங்கு உரிமை அதிக தொகைக்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை'
Published on

இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் வருகிற பொங்கலுக்கு (2018) ரிலீசாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com