இரும்புத்திரையை தள்ளி வைத்த விஷால்

மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தை தள்ளி வைத்திருக்கிறார் நடிகர் விஷால். #IrumbuThirai
இரும்புத்திரையை தள்ளி வைத்த விஷால்
Published on

‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்து முடித்து இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. விஷால் பிலிம்பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கிறார். மித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இந்த படத்தின் அனைத்து வேலைகளும் கடந்த மாதம் முடிவடைந்து விட்டது. தணிக்கை சான்றிதழும் பெற்று படத்தை திரையிடப் போவதாக அறிவித்தனர். இந்த மாதம் 29-ந்தேதி ‘இரும்புத்திரை’ படத்தை திரையிட விஷால் முடிவு செய்து இருந்தார்.

ஆனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்ததால் ஏராளமான படங்கள் திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே அல்லது ஜுன் மாதம் படத்தை வெளியிட விஷால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தணிக்கை முடிந்து ஏராளமான படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. அந்த படங்களுக்கு வழி விடுவதற்காகவே தனது சொந்த தயாரிப்பான ‘இரும்புத்திரை’ ரிலீஸ் தேதியை விஷால் தள்ளி வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com