மா.கா.பா.விற்கு கைக்கொடுக்கும் விஷால்

தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மாணிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட இருக்கிறார்.
மா.கா.பா.விற்கு கைக்கொடுக்கும் விஷால்
Published on

இப்படம் ஆரம்பிக்கும் போது போஸ்டர் ஒன்று வெளியானது. பாட்ஷா படத்தில் ரஜினி மாணிக் பாட்ஷாவாக இருக்கும் கெட்டப்பில் மா.கா.பா.ஆனந்த் அமர்ந்திருக்கும்படி அந்த போஸ்டரை வடிவமைத்திருந்தனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறு வேடத்தில் சுஜா குமார் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகர் விஷால், செப்டம்பர் 15ம் தேதி வெளியிட இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com