முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதா? வேண்டாமா? - விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல்

முரளிதரன் பயோபிக் குறித்து முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி ஓரிரு நாளில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரளிதரன், விஜய் சேதுபதி
முரளிதரன், விஜய் சேதுபதி
Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில்,  800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ளதால் நடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விஜய்சேதுபதி ஆலோசிக்க உள்ளதாகவும், ஒரிரு நாளில் இதுகுறித்து தனது முடிவை அவர் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com