

மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால் அந்த விதியை மதியால் வெல்லமுடியுமா? முடியாதா? இதுதான் படத்தின் ஒன் லைன். அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தில், நட்புக்காக ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
“தாறுமாறா ஒரு பார்வை பார்க்க நேர்மாறா… என்ன அடிச்சி தூக்க” என்பதுதான் அந்த பாடலின் வரி. கபிலன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு ரமீஷ்ராஜா, ஜனனி ஐயர் இருவரும் இணைந்து ஆடிப்பாட பாண்டிச்சேரியில் படமாக்கி உள்ளார்கள். தற்போது இந்த பாடலை அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார்கள்.