இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு

மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
Published on

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர்.

இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் பாடினார்.

இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.

நான், வருகிற 28-ந்தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சிதான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.

மலையாளத்தில் பல இனிமையான பாடல்களை பாடி உள்ளேன். அந்த பாடல்களில் பிரபலமான பாடல்களை மைசூர் இசை நிகழ்ச்சியில் பாடி நிறைவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com