இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
Published on

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com