குடிக்கலாமா? வேண்டாமா? மது பாட்டிலை வைத்து முடிவு செய்யாமல் தவித்த வரலட்சுமி

காதல் மன்னன் படப்பிடிப்பில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு குடிக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்காமல் தவித்த வரலட்சுமி.
குடிக்கலாமா? வேண்டாமா? மது பாட்டிலை வைத்து முடிவு செய்யாமல் தவித்த வரலட்சுமி
Published on

சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘காதல் மன்னன்’ என்ற சினிமா படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக சந்திர மவுலி நடிக்கிறார்.

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு, இதை குடிக்கலாமா? வேண்டாமா? டாஸ்மாக், முடிவெடுக்கும் நேரமிது. என்று விமல் மற்றும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com