சூர்யா படத்தை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்கள்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சூர்யா தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படத்தை எதிர்த்திருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
Published on: 

கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில், ''இந்த முடிவை நாங்கள் எதிர்கிறோம். 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது. திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com