மீண்டும் இணையும் ‘மருது’ கூட்டணி?

மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் - முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தையா, விஷால்
முத்தையா, விஷால்
Published on

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.

இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தானாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால், ஏற்கனவே முத்தையா இயக்கிய மருது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com