மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி, காந்தி டாக்ஸ், விக்ரம் போன்ற படங்கள் உள்ளன.
விஜய் சேதுபதி, பிரேம் குமார்
விஜய் சேதுபதி, பிரேம் குமார்
Published on

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. 

பிரேம் குமார்

இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com