வெற்றி

அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகின் ராவ், அஞ்சனா கீர்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘வெற்றி’ படத்தின் முன்னோட்டம்.
வெற்றி படத்தின் போஸ்டர்
வெற்றி படத்தின் போஸ்டர்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். 

மேலும் அனுபமா குமார், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com