சூர்யா 40 படத்தில் திடீர் மாற்றம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூர்யா
சூர்யா
Published on

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. 

கொரோனா அச்சம் தீராத நிலையில் சூர்யாவின் அறிவுறுத்தலின் பேரில் இதன் படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com