எம்.பி. பதவி கொடுத்தால் கட்சியில் இணைய தயார் - சந்தானம்

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சந்தானம், எம்.பி. பதவி கொடுத்தால் கட்சியில் இணைய தயார் என்று கூறியிருக்கிறார்.
சந்தானம்
சந்தானம்
Published on

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். ஜான்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானத்திடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சந்தானம் ராஜ்ய சபா எம்பி பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயார் என்று காமெடியாக பதில் கூறினார். மேலும் சசிகலா அழைத்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு நிச்சயமாக யார் சீட்டு கொடுத்தாலும் செல்ல தயார் என்றார்.

மேலும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com