மீண்டும் ஜீத்து ஜோசப் உடன் கூட்டணி அமைத்த மோகன்லால்

திரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
மோகன்லால், ஜீத்து ஜோசப்
மோகன்லால், ஜீத்து ஜோசப்
Published on

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து மோகன்லால் மற்றும் திரிஷாவை வைத்து ‘ராம்’ என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜீத்து ஜோசப். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடு செல்ல முடியாததால், அப்படத்தை கிடப்பில் போட்டனர்.

அண்மையில் மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் இணைந்து பணியாற்றிய திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டுவெல்த் மேன் படத்தின் போஸ்டர்

இந்நிலையில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாம். இப்படத்திற்கு ‘டுவெல்த் மேன்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com