பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இளையராஜா

உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜா
இளையராஜா
Published on

சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

இதனிடையே பிரசாத் ஸ்டுடியோ-வில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிரசாத் ஸ்டுடியோ அளித்த பதில் மனுவில், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் போன்ற நிபந்தனைகளுக்கு இளையராஜா சம்மதித்தால் அவரை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ உடைமைகளை உரிமை கோர மாட்டேன் எனவும் இளையராஜா அதில் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com