ஆபாச கேள்விக்கு கூலாக பதில் அளித்த அனிகா

நடிகர் அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்தரன்.
அனிகா
அனிகா
Published on

என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார். 

அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com