டாணா

யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் முன்னோட்டம்.
டாணா படக்குழு
டாணா படக்குழு
Published on

நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா.ஜி.ஆர்.என். ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி கூறியதாவது: “என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்யை பார்த்து பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். 

இந்த கலவைதான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதுதான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்பு தன்மையுடன் இத்திரைப்படத்தில் செய்திருக்கிறேன்” என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com