புத்தாண்டில் முதல் அடியை எடுத்து வைத்த சூர்யா

புத்தாண்டு பிறந்ததையொட்டி, தன்னுடைய அடுத்த படத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா. #Suriya36
புத்தாண்டில் முதல் அடியை எடுத்து வைத்த சூர்யா
Published on

சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சூர்யா 36’ என்று அழைத்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் மங்களகரமான புத்தாண்டான இன்று துவங்கியது. வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com