விஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
விஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்
Published on

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

`புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

X

Maalai Malar
www.maalaimalar.com