பிளீஸ் என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

கண்ணதாசனின் பேரன் ஆதவ்விடம் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், ஆதவ் கண்ணதாசன்
சிவகார்த்திகேயன், ஆதவ் கண்ணதாசன்
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது.

இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் லிரிக்கல் வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோரது நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில், கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன், டாக்டர்  படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “(சிவகார்த்திகேயன்) கவிஞரே பயங்கர பார்ம்ல இருக்கீங்க போல, செம்ம சாங் அனிருத். அராஜகம் பண்றீங்க நெல்சன்” என்று வாழ்த்தி இருந்தார்.

ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "“நன்றி பிரதர், பிளீஸ் என்ன கவிஞர்னு எல்லாம் சொல்லாதீங்க, தாத்தா கனவுல வந்து உங்கள அடிப்பாங்க” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com