பிரபாசுக்கு பாடம் நடத்தும் ‌ஷரத்தா கபூர்

பாகுபலி பட புகழ் பிரபாசுக்கு பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர் பாடம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபாசுக்கு பாடம் நடத்தும் ‌ஷரத்தா கபூர்
Published on
‘பாகுபலி-2’ படத்தையடுத்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் ‘சாஹோ’. இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது இந்தி நடிகை ‌ஷரத்தாகபூர் நடிக்கிறார்.

‘சாஹோ’ படம் இந்தி, தெலுங்கில் தயாராக உள்ளது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பில் ‌ஷரத்தா கலந்து கொள்கிறார். அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதுபோல் ‌ஷரத்தா தனக்கு இந்தி சொல்லித்தர வேண்டும் என்று பிரபாஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அதை நிறை வேற்றுவதாக ‌ஷரத்தா வாக்குறுதி அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

‌ஷரத்தாவின் தெலுங்கு உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க இருக்கிறார். பிரபாஸ் இந்த படத்தில் இந்தியில் அவரே பேசி நடிக்க இருக்கிறார். இதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. ‘பாகுபலி-2’ வெற்றிக்கு பிறகு அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது. இந்தி பட இயக்குனர், தயாரிப்பாளர், கரண்ஜோஹர் இதற்கு தயாராக இருக்கிறார். எனவே, இந்தி படிக்க விரும்பும் பிரபாசுக்கு ‌ஷரத்தாகபூர் இந்தி பாடம் நடத்த இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com