விவசாய நிலங்களை அழித்து ரோடு போடுபவர்களுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் - சத்யராஜ்

விவசாய நிலங்களை அழித்து ரோடு போடுபவர்களுக்கு கடைக்குட்டி சிங்கம் படத்தை காட்ட வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். #Satyaraj
விவசாய நிலங்களை அழித்து ரோடு போடுபவர்களுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் - சத்யராஜ்
Published on

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமன், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சத்யராஜ் பேசும்போது, ‘இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும், விவசாய நிலங்களை அழித்து, சொகுசாக ரோட்டில் செல்வதற்காக மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2டி நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். 

படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுள்ளது’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com