டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
Published on: 

சந்தானம் நடிப்பில் தற்போது, ‘சர்வர் சுந்தரம்’, 'ஓடி ஓடி உழைக்கணும்', 'சக்கப் போடு போடு ராஜா', 'மன்னவன் வந்தானடி' ஆகிய நான்கு படங்கள் உருவாகி வருகிறது. இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்தானம் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை தொடர்ந்து சந்தானத்திற்காக புதிய கதையை உருவாக்கி இருக்கிறார் ராஜேஷ். தற்போது அப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று, முதற்கட்டமாக நடிகர்கள் ஒப்பந்தம் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com