ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கைப் படமான ‘சஞ்சு’ படத்தில் பெண்களை தவறாக சித்தரித்திருப்பதாக, படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Sanju #RanbirKapoor
ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்
Published on

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பையில் நேற்று நடிகர்-நடிகைகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

சஞ்சய் தத்துக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள், போதை பழக்கத்துக்கு அவர் அடிமையானது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தது என்று அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதில் சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

சிறைச்சாலையை தவறாக சித்தரித்து இருப்பதாக தணிக்கை குழுவில் மனு அளிக்கப்பட்டது. இப்போது படத்தில் இன்னொரு சர்ச்சை காட்சி இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும் அவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாகவும் காட்சி வைத்துள்ளனர்.

மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350-க்கும் மேற்பட்ட காதலிகள் அவருக்கு இருந்ததாக படத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளனர்.

எனவே படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார். #Sanju #RanbirKapoor #AnushkaSharma

X

Maalai Malar
www.maalaimalar.com