`யு-டர்ன்' தமிழ் ரீமேக்கில் சமந்தா

கன்னடத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற `யு-டர்ன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சமந்தா நடிக்க இருக்கிறார்.
`யு-டர்ன்' தமிழ் ரீமேக்கில் சமந்தா
Published on

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகின படம் `யு-டர்ன்'.

பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. 

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரீமேக்கில் மாற்றம் கொண்டுவர கவன்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க இருக்கிறது. 

இந்த படம் தவிர்த்து சமந்தா தற்போது விஷால் ஜோடியாக `இரும்புத்திரை', சிவகார்த்திகேயன் ஜோடியாக `சீமராஜா' படத்திலும், விஜய் சேதுபதியுடன் `சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com