விஷாலுக்கு நெருக்கடி - தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஆர்.கே.சுரேஷ், உதயா விலகல்

விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், உதயா தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகியிருப்பதால், விஷாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #ProducersCouncil #Vishal #RKSuresh
விஷாலுக்கு நெருக்கடி - தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஆர்.கே.சுரேஷ், உதயா விலகல்
Published on

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் உள்ளார். சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து வந்த நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், உதயா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

விஷால் தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற பின்னரும் அதையே கூறி வந்தார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. எனவே சிறுபட தயாரிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். விஷாலால் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

எல்லோரிடமும் பிரச்சினையில் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகள் சரியில்லை. எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இன்னும் நண்பர்கள் தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஷாலுக்கு நெருக்கமான ஆர்கே.சுரேசும், உதயாவும் விஷால் மீது குறை கூறி சங்கத்தில் இருந்து விலகி இருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ProducersCouncil #Vishal #RKSuresh #Udhaya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com