பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி

ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். #Peranbu #Mammootty
பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
Published on

‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. 

‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” 

சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Peranbu #Mammootty #Anjali

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com