தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திலும் பிரமாண்டத்தை காட்டவிருப்பதாக கூறப்படுகிறது.
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
Published on

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன. இதை இயக்கிய ராஜமவுலி உலக அளவில் பேசப்பட்டார். தெலுங்கு படம் மூலம் இந்தி படங்களின் சாதனைகளை முறியடித்ததால் இந்திய திரைப்பட இயக்குனர்களில் முக்கிய இடம் பிடித்தார்.

‘பாகுபலி-2’ படம் வெளியாகி 8 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் ராஜமவுலி அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க இருக்கிறார்கள். இந்த படமும் பிரமாண்டமாக தயாராகிறது.

நடிகர்கள் சம்பளத்துடன் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 பாகங்களும் ரூ.300 கோடி செலவில் தயாரானதாக கூறப்பட்டது. இப்போது இந்த படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது.

எனவே, தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com