பிரபாஸை தொடர்ந்து மகேஷ்பாபுவை இயக்கும் ராஜமவுலி

‘பாகுபலி-2’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் மகேஷ் பாபுவை இயக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரபாஸை தொடர்ந்து மகேஷ்பாபுவை இயக்கும் ராஜமவுலி
Published on

‘பாகுபலி-2’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிப் பரவலாக இருந்து வருகிறது.

ராஜமவுலியின் அடுத்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்ததாக ராஜமவுலி இயக்கவிருக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகஷே் பாபு நடிப்பில் ‘ஸ்பைடர்’ படம் வெளியாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு ‘பாரத் அனேநானு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலம் வம்சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த 2 படங்களையும் முடித்த பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பால் மகேஷ் பாபு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com