ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பின்னர் முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பின்னர், அவருடைய மூத்த மகள் ஜான்வி, தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்.
ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பின்னர் முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி
Published on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்தனர். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது 21 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார்.

இதுவரை ஸ்ரீதேவியுடன் பிறந்த நாளை கொண்டாடி வந்த ஜான்வி, தற்போது முதியோர் இல்லத்தில் கொண்டாடி இருக்கிறார். முதியோர்கள் அனைவரும் ஜான்வி கபூரை வாழ்த்தி பாட்டுப்பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர். 

அதன்பின் தனது சமூக வலைத்தளத்தில் நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தும் `நான் சந்தோஷமா இல்ல; திரும்ப வந்திருங்கம்மா!' என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com