சில வாரங்களிலேயே இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய பிரியா வாரியர்

இணையதளத்தில் அதிகளவு தேடப்படும் நபர்கள் பட்டியலில் ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் நடிகை பிரியா வாரியர் இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளியிருக்கிறார். #PriyaVarrier
சில வாரங்களிலேயே இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய பிரியா வாரியர்
Published on

ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவே என்ற பாடல் காட்சியில் நடித்தவர் நடிகை பிரியா வாரியர்.

கல்லூரி மாணவியான பிரியா வாரியர், இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்திருப்பார். இதன் டீசரில் பிரியா வாரியரின் முக பாவனைகள், அவர் காட்டும் நளினம் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் பாடல் காட்சியின் டீசர் வெளியான சில மணி நேரங்களில் இன்டர்நெட்டிலும், இன்ஸ்டாகிரமிலும் பல லட்சம் பேர் பார்த்தனர். இதனால் பிரியா வாரியர் ஒரே நாள் இரவில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

இதற்கிடையே இப்பாடலில் காணப்படும் கருத்துக்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி ஐதராபாத்தை சேர்ந்த சிலர் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த படக்குழுவினர் படத்தில் இருந்து பாடலையும், பாடல் காட்சியையும் நீக்க முடிவு செய்தனர். ஆனால் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு மற்றும் பல்வேறு தரப்பினரும் அளித்த ஆதரவு காரணமாக பாடல் காட்சியை நீக்கும் முடிவை படக்குழுவினர் கைவிட்டனர்.

இந்நிலையில் திருவனந்தபுரம் தெக்கின்காடு மைதானத்தில் கேரள லலித்கலா அகாடமி சார்பில் மலையாள கார்ட்டூனிஸ்டுகளின் 2 நாள் கண்காட்சி நடந்தது. இதற்கு பிரியா வாரியர் திடீரென சென்றார். அவரை பார்த்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணிக்க மலராய பூவே பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பை கண்டு நான் பயப்படவில்லை. இதற்காக சினிமா உலகைவிட்டு ஓடமாட்டேன். சமீபத்தில் கிளம்பிய எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை என்னை பண்படுத்த கிடைத்த வாய்ப்பாகவே கருதுவேன்.

இதற்கிடையே கூகுள் இணையதளத்தில் பிரியா வாரியரை தேடுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை உச்சத்தில் இருந்த இந்தி நடிகை சன்னிலியோனையும், பிரியா வாரியர் பின்னுக்கு தள்ளி முந்திவிட்டது தெரியவந்துள்ளது.

இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டிவிட்டது. இதற்கு முன்பு கத்ரினா கைப், திபீகா படுகோனே ஆகியோர் தான் முன்னணியில் இருந்தனர். அவர்களும் இப்போது பின்தங்கிவிட்டனர்.

இதற்கிடையே நடிகை பிரியா வாரியர் சார்பில் அவரது வக்கீல் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மாணிக்க மலராய பூவே என்ற பாடலின் வரிகளை தவறாக புரிந்து கொண்டுஅவர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தற்காக தொடரப்பட்ட வழக்கில் இருந்துஅவரை விடுவித்தது போல இந்த வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் பிரியா வாரியர் கூறியுள்ளார். #PriyaVarrier

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com