தமிழில் அடுத்த படம் சூர்யா உடனா? - பூஜா ஹெக்டே விளக்கம்

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா, பூஜா ஹெக்டே
சூர்யா, பூஜா ஹெக்டே
Published on

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே துவக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தை அடுத்து  ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அது தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது.  இயக்குனர் ஹரி தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார்.  இதனிடையே அருவா படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பூஜா ஹெக்டே அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வளம் வருகின்றன. ஆனால் நான் இதுவரை எதிலும் கையெழுத்திடவில்லை. கதைகள் தான் கேட்டு வருகிறேன். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எல்லாம் சரியாக நடந்தால் இந்தாண்டு தமிழ் படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com