பிறவி-2

ஜோ.தாம்சன் இயக்கத்தில் மாணவியின் ஆவி நியாயம் கேட்கும் படமாக உருவாகி இருக்கும் ‘பிறவி-2’ படத்தின் முன்னோட்டம்.
பிறவி-2
Published on

எடிசன் பாரடைஸ் நிறுவனம் சார்பாக ஜோ.தாம்ஸன் தயாரிக்கும் திகில் படம் ‘பிறவி 2’.

ஜோ.தாம்சன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஆண்டனி, ஸ்வேதா நாயகன் - நாயகியாக அறிமுகமாகிறார்கள். மதுமிதா விக்கி, மாஸ்டர் அபய், பேபி தீப்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“பகலில் அழகாகவும், இரவில் அமானுஷ்யமாகவும் காட்சியளிக்கும் கொடைக்கானலுக்கு பேய்க்கதை எழுதச் செல்கிறான் கதாநாயகன். அவனிடம் ஒரு இளம் கல்லூரி மாணவியின் ஆவி தன் ரத்தத்தையே உறையவைத்த தன்னுடைய காதல் கதையை திகிலோடும், ஆக்ரோ‌ஷத்தோடும் வெளிப்படுத்துகிறது.

“உறைந்துபோன என் ரத்தம் உருகி வழியும் காலம் ஒன்று வரும்.. அதற்காக காத்திருக்கிறேன்.. கதற கதற பழிவாங்குவேன்” என்று ஆவேசமாக கூறிவிட்டு மறைகிறது.

அந்த இளம் மாணவியின் ஆவி, தன் கதையை கதாநாயகனிடம் வெளிப்படுத்தியது ஏன்..? யாரை, எதற்காக பழிவாங்க காத்திருக்கிறது..? என்பது மீதி கதை.

நியாயம் கேட்கும் ஓர் ஆவியின் மரணவாக்கு மூலமே ‘பிறவி-2’.

திகில், அமானுஷ்யம் கலந்து உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம் இது. இதன் பெரும்பாலான காட்சிகள் கொடைக் கானல், சென்னை, காரைக்கால் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இசை - ஜெபக்குமார் பெஞ்சமின், ஒளிப்பதிவு - ராம்யோகா, எடிட்டிங் - லட்சுமணன், ‘பிறவி-2’ திரைக்கு வர தயாராகிறது.

இந்தப்படத்தின் முதல் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com