என் காலை வெட்டிடவா? - ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பியா

டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பியா, ரசிகர் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு என் காலை வெட்டிவிடவா என்று பதிலளித்துள்ளார்.
என் காலை வெட்டிடவா? - ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பியா
Published on

நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் பாலிவுட் நாயகிகள் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த- புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சமீபத்தில் நடிகை பியா பாஜ்பாய் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படம் படுகவர்ச்சியாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து 'ஏகன்', 'கோவா', 'கோ', உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்து பின்னர் நடிகை ஆனார். பியா பாஜ்பாய் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 

அவ்வப்போது, டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார் பியா. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த ஒரு ரசிகர், "இந்தப் புகைப்படத்தில் கால் தான் உங்களுடைய கவர்ச்சியான அழகைக் கெடுத்திருக்கிறது" என்கிற ரீதியில் பதிவு செய்தார். அதற்கு பியா, "அப்போ என் காலை வெட்டிவிடவா என்று பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com