

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு ஜோடியாக புதுமுகம் சந்தன் குமார் நடித்திருக்கிறார்.
ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், “நான் கடவுள்” ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜெஸ்சி கிப்ட் இசை அமைத்துள்ள இதில், இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் கார்த்திக் பாடல்களை பாடியிருக்கிறார்கள்.