செக்கச் சிவந்த வானம் படத்தின் முக்கிய தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
செக்கச் சிவந்த வானம் படத்தின் முக்கிய தகவல்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவரது காட்சிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் இணைந்து நடிக்கின்றனர். 

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடித்துவிட்ட நிலையில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிம்புவும் சமீபத்தில் துபாய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில், விஜய் சேதுபதியும் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம்.

ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. 

படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #CCV #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com