நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வருகிறார் நஸ்ரியா

மலையாள நடிகர் பகத் பாஷிலை திருமணம் முடித்த பிறகு நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நடிகை நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வருகிறார் நஸ்ரியா
Published on

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து நஸ்ரியாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான `ராஜா ராணி' படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து `நையாண்டி', `வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மலையாள படஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாஷிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நடந்தது. அதுமுதல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த படத்தை மலையாளத்தின் முன்னணி இயக்குநராக வலம் வரும் அஞ்சலி மேனன் இயக்குகிறார். இந்த படத்தில் பார்வதியும் முக்கிய கதாபாத்திரதத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com