சமந்தா படத்தில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் அஞ்சாதே நரேன்

மிஷ்கினின் `சித்திரம் பேசுதடி', `அஞ்சாதே', `முகமூடி' படங்களின் மூலம் பிரபலமான நடிகர் நரேன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `யு-டர்ன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #UTurn #Samantha #Narain
சமந்தா படத்தில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் அஞ்சாதே நரேன்
Published on

மிஷ்கின் இயக்கிய `சித்திரம் பேசுதடி', `அஞ்சாதே' படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் நரேன். இவரது கடைசியாக `ரம்' படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான `கத்துக்குட்டி' படம் இந்த வாரம் மறுபடியும் திரையிடப்படுகிறது. 

நரேன் தற்போது `ஒத்தைக்கு ஒத்த' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சமந்தா நடிப்பில் உருவாகி வரும் `யு-டர்ன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பூமிகாவும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பவன் குமார் இயக்குகிறார். ஆதி, ராகுல் ரவீந்திரன் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. #UTurn #Samantha #Narain

X

Maalai Malar
www.maalaimalar.com