போதைப்பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா

எம்.டி.ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அட்டு பட நாயகன் ரிஷி - ஆஷா பார்த்தலோம் நடிப்பில் உருவாக இருக்கும் `மரிஜூவானா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #Marijuvana
போதைப்பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா
Published on

அட்டு படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆண்தேவதை படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அடுத்ததாக அவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை எம்.டி.ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். `மரிஜூவானா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தர்ட்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கிறார். போதைப் பொருளை மையப்படுத்தி படம் உருவாகும் இந்த படத்தில் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷா பார்த்தலோம் என்ற மாடல் நடிக்கிறார்.

மேலும் பவர்ஸ்டார் சீனிவாசன், மண்ணை சாதிக், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலா ரோசையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கார்த்திக் குரு இசையமைக்க, தயாரிப்பாளர் எம்.டி.விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இதில், ஆர்.பி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், ஜாக்குவார் தங்கம், ராஜு முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். #Marijuvana

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com